Biotreets Cold Pressed Extra Virgin Oils பற்றிய பொதுவான அடிப்படை விளக்கங்களை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
பொதுவாக மார்கெட்டில் கிடைக்கும் refined எண்ணெய்கள் chemical treatment’ஐ பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுவதால் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் பளபளப்பாகவும் தெள்ள தெளிவாகவும் இருக்கும். அதில் குறிப்பிடப்படும் EFA (Essential Fatty Acid) நல்ல கொழுப்புகள் கிடைப்பது அரிதே.
Natural Sedimentation:
ஆனால் Cold pressed unrefined அதாவது மரச்செக்கைப் பயன்படுத்தி தயாரிக்கும் இயற்கையான வழிமுறையில். Chemical treatment’ஐ பயன்படுத்தி refined அல்லது filter பண்ணுவதில்லை எனவே எண்ணெய் பார்ப்பதற்கு சற்று கலங்கலாகவும் அதே வேளையில் பிரித்து எடுக்கும் பொருட்களின் நுண்ணிய பொருட்கள் (தேங்காய், கடலை, எள்ளு மற்றும் வெள்ளை நுரைப்போன்ற தோற்றம்) பிரித்தெடுத்த பத்து பதினைந்து நாட்களில் Natural sediment’டாக அடியில் தங்கிவிட வாய்ப்புள்ளது.
மேற்கூறிய Chemical treatment செய்யப்பட்ட எண்ணெய்களில் இந்த Natural sedimentation ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. எனவே, விற்பனை ப்ரதிநிதிகளான நாமும் நுகர்வோரும் செக்கினாலாகிய இயற்கையான refined செய்யப்படாத எண்ணெயை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.